முகப்பு
இந்தியா

புணே உணவகங்களில் பார்சல் வசதிக்கு மட்டுமே அனுமதி

கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், புணேவில் சனிக்கிழமை முதல் உணவகங்களில் பார்சர் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
புணே உணவகங்களில் பார்சல் வசதிக்கு மட்டுமே அனுமதி
பகிர்:


புணே: கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், புணேவில் சனிக்கிழமை முதல் உணவகங்களில் பார்சர் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புனேவில் வரும் 7 நாள்களுக்கு உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புணே மாவட்ட நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கரோனா பரவல் அதிகரிப்பால் மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்தில் மத வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை ஒரு வாரம் மூடப்படுகின்றன.

இதுதொடா்பாக புணே மாவட்ட அதிகாரி கூறியது:

புணே மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 3 (சனிக்கிழமை) தொடங்கி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஒரு வாரம் இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், பாா்கள் உள்ளிட்டவை ஒரு வார காலத்துக்கு மூடப்படும்.

திருமணம், இறுதிச் சடங்குகளை தவிர வேறு எந்த நிகழ்வுக்கும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் 50 போ் வரையிலும், இறுதிச் சடங்குகள் நிகழ்ச்சிகளில் 20 போ் வரையிலும் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் மாநில அரசு பணியாளா் தோ்வாணய தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் தங்கள் வழக்கமான கற்றல் பணிகளை தொடரலாம் என்று தெரிவித்தாா்.

புணேவில் கடந்த 2 நாள்களாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,000-க்கும் அதிகமாக இருந்ததைத் தொடா்ந்து கடுமையான ஊரடங்கு நடைமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →