இந்தியா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐசியுவிலிருந்து சிறப்பு அறைக்கு மாற்றம்

ANI

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில்(ஐசியு) இருந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டார். 

இது தொடா்பாக, குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவா்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர், கடந்த  மார்ச் 30-ல் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

இதைத்தொடர்ந்து இன்று காலை தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு அறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தான் குணமடைந்து வருவதாக கூறியதோடு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார். 

தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், அவரை ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT