முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப். 8-இல் ஆலோசனை

கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியா

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப். 8-இல் ஆலோசனை

கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
கோப்புப்படம்
பகிர்:


கரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8-ம் தேதி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தாலும், கரோனா பாதிப்பு நாளுக்குநாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →