இந்தியா

காபூலில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 4 பேர் காயம்

ANI

ஆப்கன் தலைநகர் காபூலில் கராபாக் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் சப்ஸ் சாங் கிராமத்தில் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு சுரங்கத்தைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். 

குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. காபூலின் பாக்மான் மாவட்டத்தில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.

வெடிமருந்துகள் நிறைந்த கார் ஒன்று ராணுவ வாகனம் அருகே வெடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் 12 பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் இதுவரை 307 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிப்ரவரியில்  264 பேர் உயிரிழப்பும், 278 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT