மகாராஷ்டிரத்தில் புதிதாக 59,907 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 59,907 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 59,907 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 59,907 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 31,73,261 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 30,296 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 322 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இதுவரை மொத்தம் 26,13,627 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 56,652 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 5,01,559 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.