இந்தியா

கடத்தப்பட்ட ராணுவ வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட நக்ஸலைட்டுகள்

ENS

சத்தீஸ்கரில் கடந்த சனிக்கிழமை ராணுவத்துக்கும் நக்ஸல்களுக்கும் இடையே பாஸ்டர் சரகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் போது கடத்தப்பட்ட ராணுவ வீரரின் புகைப்படத்தை நக்ஸலைட்டுகள் வெளியிட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட ராணுவ வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், நக்ஸலைட்டுகள் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

மேலும், நக்ஸலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ வீரரை விடுவிப்பது தொடர்பாக மத்தியஸ்தர் யாரையேனும் நியமிக்கவும் மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். 

முன்னதாக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவரை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட நபர், தான், நக்ஸலைட்டுகளின் தலைவன் என்றும், எங்கள் வசம் ராணுவ வீரர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதனை உறுதி செய்யும் வகையில் வீரரின் புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.

சிஆர்பிஎஃப் படையில் உயரடுக்கு பிரிவான கோப்ரா படையின் 210 ஆவது பட்டாலியன் பிரிவில் (கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரிசோலிட் ஆக்ஷன்) காவலராகப் பணிபுரிபவர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா- பிஜாபூர் மாவட்ட எல்லையில் ராணுவத்துக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது காணாமல்போனார்.

காணாமல்போன வீரர், பிஜாப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் வனப்பகுதியில் நக்ஸல்கள் எதிர்ப்புப் படையில் ஒரு அணியின் வீரராக வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்தார். சனிக்கிழமைதான் தேகல்கூடா-ஜோனகூடா கிராமங்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். பலியான 22 பேரில் கோப்ரா கமாண்டோ வீரர்கள் 7 பேர், பாஸ்டரியா பட்டாலியன் ராணுவ வீரர் ஒருவர், மாவட்ட வனக் காவலர்கள் 8 பேர், சிறப்பு அதிரடிப் படையினர் 6 பேர் அடங்குவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT