இந்தியா

"வேளாளர்' பெயரைப் பயன்படுத்த எதிர்ப்பு: மத்திய அமைச்சரிடம் பிற சமூகத்தினர் மனு

DIN


புது தில்லி: வேளாளர் இனப் பெயர் தங்களது சமூகத்தின் பெயர்; இதை மற்ற சமூகத்தினர் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது எனக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த வேளாளர் குலப் பிரதிநிதிகள் மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 பிரிவினர்கள், தங்களை பட்டியல் இனப் பிரிவிலிருந்து விலக்கி, "தேவேந்திர குல வேளாளர்' என்கிற பெயரில் அறிவிக்கும்படி கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட மத்திய, மாநில அரசுகள் இதற்கான அரசியல் சாசன திருத்தத்திற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுதொடர்பான மசோதா கடந்த மார்ச் மாதம் நிறைவேறியது. இதுகுறித்து தற்போது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பிரச்னை எழுப்பப்பட்டது.  தற்போது இந்த தேவேந்திர குலத்தினர், வேளாளர் பெயரை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனக் கூறி சுமார் 40 பிரிவுகளை உள்ளடக்கியதாகச் சொல்லப்படும் "வேளாளர் குல' பேரவையின் பிரதிநிதிகள் மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளித்தனர்.
இந்தச் சந்திப்பில் இடம் பெற்ற போராசிரியர் டாக்டர் பாலசந்தர் கூறியதாவது: 
எங்களது வேளாளர் குலம் தமிழகத்தில் 27 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் திருநெல்வேலியில், சைவ வேளாளர் (பிள்ளைமார்), பாண்டிய, சோழிய வேளாளர், நாஞ்சில் வேளாளர், வேளாளர் கவுண்டர், தொண்டை மண்டலத்தில் முதலியார், செட்டி வேளாளர் என பல பிரிவினர் வேளாளராகக் கருதப்படுபவர்கள். இவர்கள் சைவம், அசைவம், முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பிரிவுகளை உள்ளடக்கியது.
இதற்கு வரலாற்று ரீதியான, மரபியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், தேவேந்திர குலத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக "வேளாளர்' பெயரை தவறாகப் பயன்படுத்தி வந்து தற்போது சட்டபூர்வமாக பெயரை மாற்றியுள்ளனர். இது பெயர் உரிமையியல் பிரச்னை. இதற்கு இவர்களுக்கு வரலாற்று ரீதியாகவும் மரபியல் ரீதியாகவும் தொடர்பு இல்லை. இந்த பெயர் மாற்ற கோரிக்கைக்கு எதிராக 9 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன என்றார் பாலசந்தர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT