முகப்பு
இந்தியா

வேளாண் துறை அமைச்சருக்கு 2-வது டோஸ் கரோனா தடுப்பூசி

வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
பகிர்:

வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 

ஏற்கெனவே கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், இன்று (ஏப்ரல் 8) இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கரோனா முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →