இந்தியா

அனைவருக்கும் தடுப்பூசி தேவை: பிரதமருக்கு கேஜரிவால் கடிதம்

DIN

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக தில்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

தில்லியில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வழிவகை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார். 

அந்தக் கடிதத்தில் மேலும் இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த  வேண்டும் என்றும்,

மருத்துவமனைகளில் மட்டுமே கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், முகாம்கள் அமைத்தும் கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சில கரோனா தடுப்பூசிகளைப் பெற்றோம். அதிக அளவிலான கரோனா தடுப்பூசிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்போம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT