இந்தியா

நொய்டாவில் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்

DIN

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏப்ரல் 17ஆம் தேதி வரை இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களிலும் இரவுநேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக நொய்டா மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாவட்டம் முழுவதும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை இரவுநேரப் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் இந்தப் பொதுமுடக்கத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 17 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்விநிலையங்களில் நேரடி வகுப்புகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT