முகப்பு
இந்தியா

மும்பையில் ஒரேநாளில் 9200 பேருக்கு கரோனா

மும்பையில் மட்டும் புதிதாக 9,200 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
மும்பையில் ஒரேநாளில் 9200 பேருக்கு கரோனா
பகிர்:

மும்பையில் மட்டும் புதிதாக 9,200 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இதனால், வார இறுதி நாள்களில் அங்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மும்பையில் வெள்ளிக்கிழமை மட்டும் 9,200 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 5,00,898 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் 5,099 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,97,613 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 11,909 பேர் பலியாகியுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 90,333 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments