தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒமர் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு நாள்களில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு நாள்களில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா புதன்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இதையடுத்து இன்று பிற்பகல் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
இன்று பிற்பகல் எனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை சீராக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், 'கரோனாவிலிருந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து வரும் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.