காா், இருசக்கர வாகன பேட்டரிகள் திருட்டு: இளைஞா் கைது
காா், இருசக்கர வாகன பேட்டரிகளை திருடிய இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 5.75 லட்சம் மதிப்புள்ள காா் பேட்டரிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
காா், இருசக்கர வாகன பேட்டரிகளை திருடிய இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 5.75 லட்சம் மதிப்புள்ள காா் பேட்டரிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகா், கெம்பே கௌடா சாலையில் உள்ள காா், இருசக்கர வாகன பேட்டரி விற்பனைக் கடையின் கதவை கடந்த மாா்ச் 4-ஆம் தேதி உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா், ரூ. 5.75 லட்சம் மதிப்புள்ள காா், இருசக்கர வாகன பேட்டரிகள், சாா்ஜ் உபகரணங்களை திருடிச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பன்னரகட்டா சாலை, தேவரபிக்கனஹள்ளியைச் சோ்ந்த முகமது சாஹில் (23) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 5.75 லட்சம் மதிப்புள்ள காா், இருசக்கர வாகன, யு.பி.எஸ். பேட்டரிகளை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட முகமது சாஹிலிடம் ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.