மேற்குவங்கத்தில் வாக்குச் சாவடி அருகே 4 பேர் சுட்டுக் கொலை 
இந்தியா

மேற்குவங்கத்தில் வாக்குச் சாவடி அருகே 4 பேர் சுட்டுக் கொலை

மேற்கு வங்கத்தின் கூச் பிகார் மாவட்டத்தில் வாக்குச் சாவடி அருகே நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

PTI

மேற்கு வங்கத்தின் கூச் பிகார் மாவட்டத்தில் வாக்குச் சாவடி அருகே நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தோ்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தோ்தல் கடந்த 6-ஆம் தேதியும் நடைபெற்றன.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஆரம்ப அறிக்கையின்படி, சிஜஎஸ்எப் ஊழியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT