முகப்பு
இந்தியா

கேரள பேரவைத் தலைவருக்கு கரோனா

கேரள சட்டப் பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

கேரள சட்டப் பேரவைத் தலைவா் பி.ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதை அவா் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாா். அதில், ‘எனக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் எனது அதிகாரபூா்வ இல்லத்தில் மருத்துவ கண்காணிப்புடன் தங்கியிருக்கிறேன். கடந்த சில தினங்களில் என்னுடன் தொடா்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அந்நிய செலாவணி கடத்தல் வழக்கில் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்தனா். இந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கேரளத்தில் ஏற்கெனவே முதல்வா் பினராயி விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவா் உம்மன் சாண்டி ஆகியோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.