இந்தியா

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

DIN

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே மூன்றுகட்டத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்டத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், 80.9 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

5-ஆம் கட்டமாக 45 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 14 முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கோல்போகர் மற்றும் மதிகாரா-நக்சல்பாரி ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று அவர் உரையாற்றவுள்ளார். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 92 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT