முகப்பு
இந்தியா

உ.பி.: புதிதாக 13 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா

உ.பி.: புதிதாக 13 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,685 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,92,015-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 81,576 பேர் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த ஒருநாளில் மட்டும் 3,197 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 6,14,819-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 72 பேர் இறந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,224-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →