முகப்பு
இந்தியா

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீல் ராஜிநாமா

கேரள மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி.ஜலீல் (கோப்புப்படம்)
பகிர்:

கேரள மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய ஜலீல் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்று லோக் ஆயுக்தா கூறியிருந்த நிலையில், இன்று (ஏப்.13) அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

தமது பதவியை தவறாக பயன்படுத்தியதாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலை ராஜிநாமா செய்ய முதல்வர் பினராயி விஜயனை கடந்த சில நாள்களுக்கு முன்பு லோக் ஆயுக்தா வலியுறுத்தியது. 

லோக் ஆயுக்தாவின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஜலீல் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். எனினும் இது தொடர்பான விசாரணை நடைபெறுவதற்கு முன்பு அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →