ஒருநாள் பாதிப்பு: பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகளை முந்திய ராய்ப்பூர் 
இந்தியா

ஒருநாள் பாதிப்பு: பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகளை முந்திய ராய்ப்பூர்

உலக நாடுகளான பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், மெக்ஸிகோ, தென்னாப்ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

DIN


ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நாள் பாதிப்பு 4,168 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஒரு நாள் கரோனா பாதிப்பில், உலக நாடுகளான பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், மெக்ஸிகோ, தென்னாப்ரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ராய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, மாநிலத்தில் புதிய கரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது.

ஒரு நாள் பாதிப்பாக பிரிட்டனில் 2,472, ஐக்கிய அரபு அமீரகத்தில் 1928 என்ற அளவில் பதிவான நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கடுமையாக உயர்ந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. முதல் முறையாக அங்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,09,139 ஆக உயர்ந்துள்ளது. 

ராய்ப்பூரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கு படுக்கை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! குற்றவாளியைத் துப்பாக்கியால் சுட்ட சிறுவன்!

பிக் பாஸ் 9: மீனவப் பெண் சுபிக்‌ஷாவை தாக்கும் நடிகை சான்ட்ரா!

அடுத்த 5 ஆண்டுகளில் உலகப் போர்? எலான் மஸ்க் எச்சரிக்கை!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக்கொலை! காவல் அதிகாரி ஒருவர் பலி!

"பிகார் மக்கள் தமிழக அரசியலை நிர்ணயிக்க முடியாது!" மன்சூர் அலிகான் உண்ணாவிரதப் போராட்டம்!

SCROLL FOR NEXT