இந்தியா

நாட்டில் இதுவரை 11 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி

DIN


நாடு முழுவதும் இதுவரை 11 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 26 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது 3-வது கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

காலை 7 மணி நிலவரப்படி இதுவரை மொத்தமாக 11,11,79,578 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 26 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் 8 மாநிலங்களில் மட்டும் இதுவரை 60.16 சதவிகித கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் 90,48,686 சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பு மருந்தும், 55,81,072 பேருக்கு 2-ம் தவணை தடுப்பு மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 4,24,66,354 பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 24,67,484 பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இதேபோன்று 45 வயதுக்கு மேற்பட்டோரில் 3,56,50,444 பேருக்கு முதல்கட்ட கரோனா தடுப்பூசியும், 8,18,335 பேருக்கு இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT