இந்தியா

ராஜஸ்தானில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN

அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. 

எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு சரிவர நடைபெறாத காரணத்தால்  8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக ராஜஸ்தான் மாநில பள்ளிக்கல்வித்துறை புதன்கிழமை அறிவித்தது.

அதேசமயம் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடைபெறுவதாக இருந்த பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT