உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.
கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்று இருந்தால் அவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.