இந்தியா

குஜராத்திலிருந்து ரெம்டெசிவிர் ஊசிகளை வாங்கும் உ.பி. அரசு

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரெம்டெசிவிர் ஊசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், அவசர தேவைக்காக குஜராத் மாநிலத்திலிருந்து அதனை வாங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால், கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகளைப் போன்று ரெம்டெசிவிர் மருந்தையும் பயன்படுத்தலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மற்ற நாடுகளுக்கான ரெம்டெசிவிர் ஏற்றுமதிக்கும் அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலமான குஜராத்திலிருந்து ரெம்டெசிவிர் மருந்தினைப் பெருவதற்கு அம்மாநில முதல்வர் திட்டமிட்டுள்ளார். 

அவசரகால பயன்பாட்டிற்காக முதல்கட்டமாக 25 ஆயிரம் ஊசிகளை வாங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது

அமெரிக்காவின் ஜிலீட் சயின்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, ரெம்டெசிவிர் ஊசியை, 7 இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மாதம் 38.80 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கும் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT