உ.பி.யில் 10 மாவட்டங்களில் இரவு பொதுமுடக்க நேரம் நீட்டிப்பு
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இரவு பொதுமுடக்க நேரத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இரவு பொதுமுடக்க நேரத்தை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள இரவு பொதுமுடக்கத்திற்கான கால அளவை நீட்டித்து புதிய அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி லக்னோ, நொய்டா, ப்ரக்யாராஜ் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 7 லட்சத்து 44 ஆயிரத்து 21 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.