முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை

ஆந்திரத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிப் படுலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

ஆந்திரத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வெட்டிப் படுலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், ஜுட்டாடா பகுதியில் வசித்து வந்தவர் ராமாராவ்(67). நேற்றிரவு தன்னுடை வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த அண்டை வீட்டாரான அப்பலராஜூ என்பவர் ராமாராவ், அவரது மனைவி உஷா, 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். 
பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
மேலும், தலைமறைவாக இருந்த அப்பலராஜூவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஆந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →