முகப்பு
இந்தியா

ராஞ்சியில் படுக்கைகள் பற்றாக்குறையால் தவிக்கும் கரோனா நோயாளிகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றின் மத்தியில் போதிய படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்துவருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
ராஞ்சியில் படுக்கைகள் பற்றாக்குறையால் தவிக்கும் கரோனா நோயாளிகள்
பகிர்:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றின் மத்தியில் போதிய படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

எனினும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் போதிய மருத்துவ வசதிகளின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள மருத்துவ அறிவியல் மையத்தில் போதிய படுக்கை வசதிகளின்றி நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் ஒரே படுக்கையை ஒன்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்படுத்தி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்காததால் தனது தந்தை இறந்துவிட்டதாகக் கூறி பெண் ஒருவர் பேசும் விடியோ பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →