இந்தியா

'ஒருநாளில் 27 லட்சம் டோஸ்; இதுவரை 11.72 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'

DIN

நாட்டில் இதுவரை 11.72 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 

வெள்ளிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தமாக 11,72,23,509 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 90,82,999 சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 56,34,634 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் முன்களப்பணியாளர்கள் 1,02,93,524(முதல் தவணை), 51,52,891 ( 2-ம் தவணை), 60 வயதுக்கு மேற்பட்டோர் 4,42,30,842 (முதல் தவணை), 30,97,961 (2-ம் தவணை, 45 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டோர் 3,87,41,890 (முதல் தவணை), 9,88,768 ( 2-ம் தவணை) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT