இந்தியா

கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 11.72 கோடியைக் கடந்தது

DIN

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை 11,72,23,509 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 27 லட்சத்து 30,359 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 26 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவா்களில் 5.42 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரிக்கிறது. புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 79.10 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, சத்தீஸ்கா், கா்நாடகம், மத்திய பிரதேசம், குஜராத், கேரளம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள்.

நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 15, 69,743-ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை மொத்த பாதிப்பில் 10.98 சதவீதம் ஆகும். குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,25,47,866. குணமடைந்தோா் சதவீதம் 87.80. கடந்த 24 மணி நேரத்தில் 1,18,302 போ் குணமடைந்துள்ளனா். 1,185 போ் உயிரிழந்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT