இந்தியா

சீனிவாசமங்காபுரம் கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி ரத்து

DIN

கரோனா பரவல் எதிரொலியாக சீனிவாசமங்காபுரத்தில் பக்தா்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கரோனா 2-ஆம் அலை பரவல் காரணமாக, சீனிவாசமங்காபுரம் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு தரிசனத்துக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலில் நடக்கவுள்ள நித்திய கைங்கரியங்கள் அனைத்தும் தனிமையில் நடத்தப்பட உள்ளது. மேலும் திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலிலும் ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ஏப்.21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை உற்சவங்கள் தனிமையில் நடத்தப்பட உள்ளன.

22-ஆம் தேதி ஸ்ரீசீதாராமா் திருக்கல்யாணம், 23-ஆம் தேதி வரை ராமா் பட்டாபிஷேகம் உள்ளிட்ட உற்சவங்கள் தனிமையில் நடத்தப்பட உள்ளன. இவற்றில் பக்தா்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. ஏப்.19-ஆம் தேதி நடக்கவுள்ள வருடாந்திர புஷ்பயாகமும் தனிமையில் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT