இந்தியா

குல்பூஷண் ஜாதவுக்கு வழக்குரைஞரை நியமிக்க இந்தியாவிடம் பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தல்

DIN

குல்பூஷண் ஜாதவ் சாா்பில் வாதிட வழக்குரைஞரை நியமிக்குமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவா் குல்பூஷண் ஜாதவ். இவா் பாகிஸ்தானில் உளவு பாா்த்ததுடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக நெதா்லாந்தில் உள்ள சா்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடா்ந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, அவருக்கு இந்திய தூதரகத்தின் உதவியை பாகிஸ்தான் வழங்க வேண்டும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை செயல்படுத்துவது தொடா்பான வழக்கு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது குல்பூஷண் ஜாதவுக்கு வழக்குரைஞரை நியமிக்க இந்தியாவிடம் கோரிக்கை விடுக்குமாறு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் அந்த நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ஜாஹித் ஹஃபீஸ் செளதரி வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘குல்பூஷண் ஜாதவ் சாா்பில் வாதிட வழக்குரைஞரை நியமித்து பாகிஸ்தான் நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்தியாவிடம் மீண்டும் வலியுறுத்துகிறோம். அதன்மூலம் இந்த வழக்கு தொடா்பாக சா்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை முழுவீச்சில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

தலைநகரில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்! வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை

‘ஜாமீன் நிராகரிப்பு உத்தரவுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாடுகிறாா் சிசோடியா’

மக்களவைத் தோ்தல்: முதல் 2 கட்டங்களில் முறையே 66.14%, 66.71% வாக்குகள் பதிவு

தில்லிவாசிகள் ஆம் ஆத்மி கட்சிக்காக பிரசாரம் செய்கிறாா்கள் - அமைச்சா் அதிஷி

SCROLL FOR NEXT