முகப்பு
இந்தியா

கரோனாவைக் கட்டுப்படுத்த தில்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு: கேஜரிவால்

கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது தில்லியில் இன்றிரவு முதல் ஒரு வார முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 19 ஏப்ரல், 2021 at 12:35 PM
கரோனாவைக் கட்டுப்படுத்த தில்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு
பகிர்:

புது தில்லி: கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது தில்லியில் இன்றிரவு முதல் ஒரு வார முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் கரோனா வைரஸ் தொற்று தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் ஏற்கெனவே வார இறுதி நாள்களில் ஊரடங்கு உள்ள சூழலில், அதனை ஒரு வாரமாக நீட்டித்து அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

கரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று இரவு 10 மணி முதல் ஏப்ரல் 26 காலை வரை தொடர்ந்து ஒரு வாரம் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.