முகப்பு
இந்தியா

தில்லி, பஞ்சாப், ஹரியாணாவிற்கு இலவச ஆக்ஸிஜன்: இந்தியன் ஆயில் நிறுவனம்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது.

அம்மூன்று மாநிலங்களிலுள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 150 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.

ஒருசில மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்க வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மூன்று மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு 150 மெட்ரிக் டன் இலவச ஆக்ஸிஜன் வழங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →