முகப்பு
இந்தியா

தில்லியில் 2,462 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன: அமைச்சர் தகவல்

தில்லியில் 2,462 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் 2,462 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தில்லியில் தற்போது வரை 18,923 படுக்கைகள் உள்ளன, அவற்றில் 16,461 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 2,462 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன என்று தெரிவித்தார். 

கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், புதிதாக படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார். 

தலைநகா் தில்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் அடுத்த திங்கள்கிழமை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →