அசாமில் உல்ஃபா தீவிரவாதிகளால் 3 ஓஎன்ஜிசி ஊழியர்கள் கடத்தல்
அசாம் - நாகாலாந்து எல்லைப் பகுதியில் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள லக்வா எண்ணைய் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று ஓஎன்ஜிசி ஊழியர்கள் உல்ஃபா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
சிவசாகர்: அசாம் - நாகாலாந்து எல்லைப் பகுதியில் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள லக்வா எண்ணைய் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று ஓஎன்ஜிசி ஊழியர்கள் உல்ஃபா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஓஎன்ஜிசியின் லக்வா எண்ணெய் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 3 ஊழியர்கள் ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான வாகனத்தில் கடத்தப்பட்டதாகவும், பிறகு அந்த வாகனம் நிமோநகர் வனப்பகுதியில் நின்றிருந்தது தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உல்ஃபா தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என்றும், அவர்கள் நாகாலாந்து வழியாக தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.