இந்தியா

ஆக்ஸிஜன் பற்றாக்குறை: கோடாவில் கரோனா நோயாளி பலி

ANI

ராஜஸ்தானின், கோடா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்ததால் கரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். 

கோடாவில் உள்ள என்.எம்.சி.எச். கரோனா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் 2 முதல் 5 நிமிட இடைவெளி ஏற்பட்ட நிலையில் கரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் நிலேஷ் ஜெயின் கூறினார். 

கரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ ஆக்ஸிஜனின் விநியோகம் குறைந்து வருகின்றன. 

கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ள நிலையில் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு இந்தியா தற்போது திரும்பியுள்ளது. தொற்று பாதிப்பு கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு மிகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT