முகப்பு
இந்தியா

ஆப்கனில் கடந்த 24 மணி நேரத்தில் 78 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் 78 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்து. 

Updated On : 22 ஏப்ரல், 2021 at 4:30 PM
ஆப்கனில் கடந்த 24 மணி நேரத்தில் 78 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:34 AM

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் 78 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்து. 

காஸ்னி, ஜாபுல், ஹெராத், பக்திகா, பால்க், நிம்ரோஸ், ஹெல்மண்ட் மற்றும் காந்தஹார் ஆகிய மாகாணங்களில் ஆப்கானிஸ்தான் தேசியப் பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் விளைவாக 78 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 44 தலிபான் தீவிரவாதிகள் காயமடைந்தனர். மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 36 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் கண்ணிவெடிகளைச் செயலிழக்கச் செய்துள்ளது. 

Advertisement

இதுதொடர்பாக தலிபான் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.