தில்லியில் 1500 காவலர்களுக்கு கரோனா தொற்று
தில்லியில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் 1500 காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் 1500 காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் காவல்துறையைச் சேர்ந்த 1500 பேருக்கு இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் இதுவரை 9 லட்சத்து 30 ஆயிரத்து 179 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.