இந்தியா

ஜார்க்கண்டில் ஒரு வார பொதுமுடக்கம் இன்று முதல் தொடக்கம்

ANI

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஜார்க்கண்டில் இன்று முதல் ஒரு வார பொதுமுடக்கம் தொடங்கியுள்ளது. 

மாநிலத்தில் கரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஸ்வஸ்த்ய சூரக்ஷா சபதம் அதாவது சுகாதார பாதுகாப்பு வாரத்தை கடைப்பிடிக்கக் கோரி அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த செவ்வாயன்று அறிவித்தார். 

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று முதல் ஏப்.29 வரை ஒரு வார பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அத்தியாவசிய பொருள்கள், வேளாண்மை, கட்டுமானம், சுரங்க மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. 

மாநில அரசின் உத்தரவுப்படி, அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒன்றுகூடாமல் வழிபாட்டுத் தலங்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்டில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,041 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் 62 பேர் இறந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT