முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் பனிச்சரிவு: 384 பேர் மீட்பு, 8 சடலங்கள் கண்டெடுப்பு

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 384 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
உத்தரகண்டில் பனிச்சரிவு: 384 பேர் மீட்பு, 8 சடலங்கள் கண்டெடுப்பு
பகிர்:

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 384 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 

சமோலி மாவட்டத்தில் நீதி வேலியை ஒட்டிய இந்திய, சீன எல்லைப் பகுதியருகே வெள்ளிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. நித்தி பள்ளத்தாக்கில் சும்னா சௌகி என்ற இடத்தைத் தாண்டிய ஒரு இடத்தில் பனிப்பாறையின் சரிந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

விபத்து நிகழ்ந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமை பற்றித் தெரிந்து கொள்ள முடியவில்லை.

பனிச்சரிவு நிகழ்ந்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி, 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை 8 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது. 

மேலும், அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →