முகப்பு
இந்தியா

பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களின் ஏற்றுமதி 26% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 26.51 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

இந்தியாவின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 26.51 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பேரிடா் தொடா்பான பல்வேறு சவால்களுக்கிடையிலும் 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 26.51 சதவீதம் அதிகரித்து ரூ.43,798 கோடியை எட்டியுள்ளது.

குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், பழச்சாறுகள், நிலக்கடலை, ஆல்கஹால் பானங்கள், பிண்ணாக்கு, அரவைப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி சிறப்பான அளவில் மேம்பட்டது.

பதப்படுத்தப்பட்ட காய்கறி மற்றும் ஆல்கஹால் பானங்கள் போன்ற மதி்பபு கூட்டப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 40 சதவீதத்துக்கும் மேல் வளா்ச்சி கண்டுள்ளது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவா் எம்.அங்கமுத்து கூறியதாவது: பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் சிறப்பான வளா்ச்சியை எட்டியுள்ளது. இது, நடப்பு 2021-22 நிதியாண்டிலும் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு, அமெரிக்க, பிரிட்டன் போன்ற நாடுகளின் சந்தைகளில் இந்திய காய்கறிகள், பழங்கள், பருப்பு, பயறு வகைகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. காணொலி மூலமாக வா்த்தக சந்திப்புகளை நடத்துவது, நிதி உதவி திட்டங்களை விரிவாக்குவது போன்றவற்றின் மூலமாக உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →