தில்லி சர் கங்காராம் மருத்துவமனைக்கு 5 டன் ஆக்சிஜன் சென்றடைந்தது!
தில்லி சர் கங்காராம் மருத்துவமனையில் இன்று அதிகாலை 5 டன் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது.
தில்லி சர் கங்காராம் மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 5 டன் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது.
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல்வேறு மருத்துவமனைகள் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 நோயாளிகள் உயிரிழந்தனர்.
இதையடுத்து தில்லி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 5 டன் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. கடந்த கடந்த மூன்று தினங்களாக ஆக்சிஜன் இருப்பில் உள்ளதாக அந்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது