முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு 2ஆவது முறையாக கரோனா

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு 2ஆவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு 2ஆவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "எனக்கும் என் மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு இது இரண்டாவது தடவையாகும். தேர்தல் வாக்குப் பதிவின்போது கலந்துகொள்ள முடியாமல் போவது எனக்கு பெரும் வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
மேற்கு வங்கத்தில் நாளை 7ஆம் கட்டமாக 36 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் பபுல் சுப்ரியோ சார்ந்த அசான்சோல் பகுதிக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் இதுவரை 7,28,061 பேர் கரோனாவால் பாதிப்பட்டுள்ள நிலையில் 10,884 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 81,375 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.