முகப்பு
இந்தியா

வேதாந்தா மருத்துவமனையில் 4 கரோனா நோயாளிகள் பலி; ஆக்சிஜன் பற்றாக்குறையா?

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் இன்று அதிகாலை நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள வேதாந்தா மருத்துவமனையில் இன்று அதிகாலை நான்கு கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும் நோயாளிகள் இறந்ததற்கான காரணத்தை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தானே மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

விசாரணைக்காக ஒரு குழுவையும் நியமித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.