காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கெயிக்வாட் கரோனாவுக்கு பலி
மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏக்நாத் கெயிக்வாட் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏக்நாத் கெயிக்வாட் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
அவரருக்கு வயது 81. மும்பை மக்களவையில் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மகாராஷ்டிரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெயிக்வார்ட்டின் தந்தை ஆவார்.
கெயிக்வாட் மகாராஷ்டிர அமைச்சரவையில் பல ஆண்டுகளாக அமைச்சராக பணியாற்றியவர். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் பல்வேறு சந்தர்பங்களில் இருந்தவர்.
Advertisement
இவர், சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.