முகப்பு
இந்தியா

நண்பருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க 1,300 கிமீ பயணித்தவர்!

கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது நண்பனுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை கொடுப்பதற்கு ஒருவர் 1,300 கிமீ தூரம் பயணித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது நண்பனுக்கு ஆக்சிஜன் சிலிண்டரை கொடுப்பதற்கு ஒருவர் 1,300 கிமீ தூரம் பயணித்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர ஷர்மா. இவருக்கு கடந்த ஏப்ரல் 24 அன்று உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள நண்பர் சஞ்சய் சக்சேனாவிடமிருந்து போன் அழைப்பு வந்தது. 

அப்போது அவர்களின் நண்பன் ராஜன் என்பவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஒருநாளைக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்றும் சஞ்சய், தேவேந்திராவிடம் கூறியுள்ளார். 

இதையடுத்து தேவேந்திரா, போகோரோவில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்கு சுமார் 150 கிமீ பயணம் செய்து கடினமான சூழ்நிலையில் ஆக்சிஜனைப் பெற்றுள்ளார். 

பின்னர் அங்கிருந்து கார் மூலமாக சுமார் 1,300 கிமீ  பயணம் செய்து காசியாபாத்தை அடைந்தார். 24 மணி நேர பயணத்திற்கு பின்னர் அவர் ஏப்ரல் 26 அன்று நண்பரை சந்தித்து ஆக்சிஜன் சிலிண்டரை வழங்கியுள்ளார். 

செல்லும் வழிகளில் காவல்துறையினரின் கெடுபிடியும் அதிகமாக இருந்துள்ளது. நண்பனின் நிலைமையை எடுத்துக்கூறி அவர் காசியாபாத் வந்து சேர்ந்தார். 

மருத்துவமனையில் படுக்கை இல்லாத நிலையில், தற்போது ராஜன் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.