முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1,500: அமைச்சர்

​மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப்பட்ட 9.17 லட்ச கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 1,500 போடப்பட்டுள்ளதாக அந்த மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் புதன்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப்பட்ட 9.17 லட்ச கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 1,500 செலுத்தப்பட்டுள்ளதாக அந்த மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் புதன்கிழமை தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று 2-ம் அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால், மாநிலத்தில் மே 1 வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என மாநில பொது சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதனிடையே மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 9.17 லட்ச கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 4 நாள்களில் ரூ. 137.61 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் அறிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மகாராஷ்டிர கட்டட மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் இந்த முடிவை செயல்படுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பொது முடக்க காலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5,000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.