முகப்பு
இந்தியா

பெங்களூருவிலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்

​பெங்களூருவிலிருந்து பேருந்து மூலம் ஏறத்தாழ 4 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக கர்நாடக போக்குவரத்துத் துறை கணித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
கோப்புப்படம்
பகிர்:


பெங்களூருவிலிருந்து பேருந்து மூலம் ஏறத்தாழ 4 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக கர்நாடக போக்குவரத்துத் துறை கணித்துள்ளது.

மேலும் 2 லட்சம் பேர் சொந்த ஊருக்குத் திரும்ப பல்வேறு பேருந்து நிலையங்களில் காத்திருப்பதாகவும் கர்நாடக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "பெரிதளவில் கூட்டம் இருப்பதால் பேருந்துகளும் அதிகளவில் பயணிகளைக் கொண்டு இயங்குகின்றன. மாநில போக்குவரத்து பேருந்துகள் மூலம் ஏறத்தாழ 3 லட்சம் பேர் பெங்களூருவிலிருந்து வெளியேறிய நிலையில், 1 லட்சத்துக்கும் மேலானோர் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்" என்றார். 

மெஜெஸ்டிக் பேருந்து நிலைய போக்குவரத்து அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "தொழிலாளர்கள் பெங்களூருவிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பதில் சில ஒப்பந்ததாரர்கள் வெற்றியடைந்தபோதிலும், பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்து நகரத்தைவிட்டு வெளியேறுகின்றனர்" என்றார்.

தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டாம் என ஒப்பந்ததாரர்கள் ஒருபுறமும், அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக் கவசம் அணியக் கோரி போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அறிவுறுத்தும் காட்சிகள் மறுபுறமும் பேருந்து நிலையங்களில் இயல்பாகத் தென்படுவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

கரோனா 2-ம் அலையின் தீவிரத்தன்மையால் கர்நாடகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.