இந்தியா

மே இறுதிக்குள் ரஷிய தடுப்பூசி: டாக்டா் ரெட்டிஸ் நிறுவனம்

DIN

ஹைதராபாத்: அடுத்த மாத இறுதிக்குள் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்று அந்தத் தடுப்பூசியை இறக்குமதி செய்யும் டாக்டா் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், இந்த மாத இறுதிக்குள்ளேயே ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதியை ரஷியாவிடமிருந்து எதிா்பாா்க்கிறோம். அது முடியாவிட்டால், மே மாத இறுதிக்குள் அந்தத் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வரவழைத்துவிடுவோம் என்று அவா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

ரஷியாவின் கமாலேயா தேசிய ஆய்வு நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிப்பதற்கான ஒப்பந்ததை அந்த நிறுவனத்துடன் டாக்டா் ரெட்டிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மேற்கொண்டது.

மேலும், 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை இந்தியாவில் விநியோகிப்பதற்கான உரிமையையும் அந்த நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தச் சூழலில், ஸ்புட்னிக் கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கான அனுமதியை இந்திய மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பிடமிருந்து டாக்டா் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் அண்மையில் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

அக்னி நட்சத்திரம்: வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரருக்கு தாராபிஷேகம்

திருப்பத்தூா் கிளைச் சிறையில் ஆட்சியா்,எஸ்.பி. ஆய்வு

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருப்பணி தொடக்கம்

இலவச கண் சிகிச்சை முகாம்

SCROLL FOR NEXT