முகப்பு
இந்தியா

கேரளம் நிலம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மறைவு; ராகுல் காந்தி இரங்கல்

கேரள மாநிலம் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் இன்று காலமானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.வி.பிரகாஷ்
பகிர்:

கேரள மாநிலம் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.வி.பிரகாஷ்(56) ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். 

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். தேர்தலில் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன. 

அவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மலப்புரம் டி.சி.சி தலைவர் மற்றும் யு.டி.எஃப் நிலம்பூர் வேட்பாளர் வி.வி.பிரகாஷின் அகால மறைவு கவலை அளிக்கிறது. காங்கிரசின் நேர்மையான மற்றும் கடின உழைப்பாளியாக அவர் நினைவுகூறப்படுவார், மக்களுக்கு உதவ அனைத்து நேரங்களிலும் தயாராக இருந்தவர். அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார். 

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →