இந்தியா

தில்லிக்கு 1,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவை: நீதிமன்றத்தில் முறையீடு

DIN


தில்லிக்கு ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். 

கடந்த 27-ம் தேதி  தில்லியிலிருந்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் 70 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பிரித்து வழங்கப்பட்டது. 

இதனிடையே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தனியார் ஆலைகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆலை நிர்வாகம் ஆக்ஸிஜனை முறையாக விநியோகம் செய்யவில்லை என்று எழுந்த புகாரை விசாரித்தபோது, நீதிமன்றம் இதனைத் தெரிவித்தது.

எனினும், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருவதால், 1000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்க மத்திய அரசை நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT